தமிழரை வெட்டி வெட்டி கொல்வோம் என பேயாட்டம் ஆடும் பிக்குவுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு!

சிங்களவர் செறிந்து வாழும் தெற்கில் உள்ள தமிழர்களது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அம்பிட்டிய பிக்குவின் மிரட்டல்

பொலிசார் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குற்றம் செய்யும் கிழக்கு மாகாணத்தின் பிரபல பௌத்த பிக்கு ஒருவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஜயந்திபுர மயானத்தில் தனது தாயார் உள்ளிட்ட சிங்களவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் புதைகுழிகள் இருந்த பகுதியை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்யம் சாணக்கியன் புல்டோசர் மூலம் அழித்து விட்டதாகவும் , அது புலிகள் செய்தது போன்ற குற்றம் என மங்களராம விகாரையின் சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார், இப்படியான இனவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு சுமனரதன தேரர் , ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்ததோடு , நாட்டில் உள்ள, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவோம் என மிரட்டிய காணோளி பலரை வெறுப்படைய வைத்துள்ளது .

தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் பிரபல பௌத்த பிக்குவின் மரண அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் , பாராளுமன்ற உறுப்பினருமான எம். சுமந்திரன் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் ஏன் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க தாமதிக்கிறது என சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த சில நாட்களாக அம்பிட்டிய மங்களராமயே சுமன தேரர் வெளியிட்ட பல பகிரங்க அறிக்கைகள் ஊடகங்களில் பரவலாக பிரசாரம் செய்யப்பட்டதை நான் உங்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன். பா.உ. ராசமாணிக்கம் அவர்களை தாக்கி, தெற்கில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் துண்டு துண்டாக வெட்டப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்! இது 2007 ஆம் ஆண்டு ICCPR சட்டம் எண் 56ன் 3(1) மற்றும் (2) ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். காவல்துறை ஏன்? அந்த பிக்கு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை?” என மேலும் வினவியுள்ளார்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் குடியேற்றப்பட்ட மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை ஆகிய பிரதேசங்களில் உள்ள புல்வெளிகள் பல சிங்களக் குடும்பங்களுக்கு நெல் மற்றும் ஏனைய பயிர்களை பயிரிடுவதற்காக மாற்றப்பட்டது. அந்த நேரத்தில் பாரம்பரிய கறவை மாடு வளர்ப்பாளர்கள் மற்றும் பயிர்ச்செய்கையாளர்களிடையே மோதல்கள் உருவாகி இருந்தன.

அந்த பூமியை விடுவிக்கக் கோரி ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் கிழக்கு மாகாண பாற்பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி நீதிமன்றத்தின் உதவியை கோரியதையடுத்து, அம்பிட்டிய சுமண தேரர் இராசமாணிக்கம் எம்.பி. மீது கடும் சொற் பிரயோகத்தில் ஈடுபடத் தொடங்கினார் .

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாற்பண்ணையாளர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட முயற்சியே இதற்குக் காரணமாகும்.

மங்களராம விகாரையின் தலைவர் அம்பிட்டிய சுமணரதன தேரர், தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் காணொளி மூலம் வெளியிட்ட கருத்துக்கு தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அங்கே மட்டக்களப்பில் மீண்டும் ஒருமுறை இனவாதத்தைக் கிளறிவிட்ட எங்கள் அம்பிட்டிய சுமனரதன தேரரின் இனவாதப் பேச்சு.. அது தவறு.. கண்டிக்கிறோம்.ஏனென்றால் நாடு போயா நேரத்தை கடைப்பிடிக்க இருக்கும் இந்த நேரத்தில். , தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவோம், செத்து மடிவார்கள் என இனவாத கருத்துகளை அள்ளி வீசுகிறார். நாடாளுமன்ற உறுப்பினரை குற்றம் சாட்டுகிறார். மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளரையும் குற்றஞ்சாட்டுகிறார். பிரச்சனைகள் இருந்திருந்தால் நாட்டில் தீர்க்க வழிகள் ஏராளம் உள்ளன. பொலிசுக்கு போகலாம் அல்லது உள்ளுர் ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு செல்லலாம். அது உங்களால் முடியும். ”

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொறுப்பானவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

“யுத்தம் முடிந்து நாடு சுமூக நிலைக்கு மாறிக் கொண்டிருக்கும் காலம் இது. எனவே இந்த நேரத்தில் இனவாதத்தை தூண்டாதீர்கள்.இந்த நாட்டில் ICCPR சட்டத்தின் கீழ் மூன்றாம் இலக்கத்தின் கீழ் சட்டம் பாய்ந்ததை நாம் பார்த்தோம். தேசபக்தி என பேசி இனவாதத்தை தூண்டுபவர்கள் கைது செய்யப்பட்டார்கள் பௌத்த மத தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள் இன்னும் பல மத தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள் இந்த தேரரையும் கைது செய்ய வேண்டும் என்று நான் கூற விரும்புகின்றேன்.ஏனென்றால் இதனை தொடர்ந்து செய்ய முடியாது. இது முதல் முறையல்ல.. இது கடைசி முறையும் அல்ல. இது இப்படியே தொடராது இருக்க செயல்படுவது நாட்டின் ஜனாதிபதியின் கையில் உள்ளது. சட்டத்துக்கு பொறுப்பான நாட்டின் அமைச்சருக்குரியது.” என்று தெரிவித்துள்ளார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.