இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 4 நாள் போர் நிறுத்தம் : கைதிகள் பரிமாற்றம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள 4 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய ஏராளமான லொரிகள் இன்று காசா பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு, இந்த 4 நாட்களில் தினமும் உணவுப் பொருட்கள் அடங்கிய 200 லொரிகள் வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், ஹமாஸ் 13 இஸ்ரேலியர்களையும் 12 தாய்லாந்தைச் சேர்ந்தவர்களையும் எகிப்திடம் ஒப்படைத்த பின்னர், அவர்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர்.

இவர்களுக்கு பதிலாக 39 பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் விடுவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸால் பிணைக் கைதிகளாக இருந்த 50 இஸ்ரேலியர்கள் 4 நாட்களுக்குள் விடுவிக்கப்பட உள்ளனர், 150 பாலஸ்தீன கைதிகளை 4 நாட்களுக்குள் இஸ்ரேலும் விடுதலை செய்ய உள்ளது.

கத்தார் , எகிப்து மற்றும் அமெரிக்காவின் தலையீட்டால் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே 4 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இன்று காசா பகுதியில் சண்டை இல்லாததால், மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடந்து செல்வதைக் காணமுடிந்தது.
.
இந்த ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ள தரப்பினர், இந்த போர்நிறுத்தத்தை நீடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

– ஜோசப் டயஸ்

Leave A Reply

Your email address will not be published.