உடல் உறுப்புகளை வைத்து மருந்து தயாரித்த சித்த வைத்தியர்…கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்!

கும்பகோணம் அருகே இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்த வைத்தியர், மனித உடல்களை வைத்து மருந்து தயாரித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சித்த வைத்தியர், மேலும் ஒரு கொலை செய்ததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். சித்த வைத்தியரின் வீட்டை இடித்தபோது நூறாவது நாள் திரைப்படம் போல எலும்புகளும், பற்களும் கண்டெடுக்கப்பட்டது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்மைக் குறைவு சிகிச்சைக்காக வந்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த அசோக்ராஜ் என்பவரை, சித்த வைத்தியர் கேசவமூர்த்தி தன்பாலின உறவுக்கு அழைத்துள்ளார். இதற்கு அசோக்ராஜ் மறுக்கவே, அவருக்கு ஆண்மையை அதிகரிக்கும் மாத்திரை ஒன்றை கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அசோக்ராஜின் உடலை துண்டுதுண்டாக வெட்டி வீட்டின் பின்புறத்தில் புதைத்திருக்கிறார்.

இந்த விவகாரம் காவல்துறைக்கு எட்டியதை அடுத்து, கேசவமூர்த்தியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் . அப்போது 2021-ஆம் ஆண்டு , 26 வயதான அனாஸ் என்பவரையும் கேசவமூர்த்தி கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்தை ஒப்புக்கொண்டார். அவரது வீட்டின் பின்புற சுவர்களை இடித்தபோது, அதில் சில எலும்புகளும், நாயின் பற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.