கதிர்காம கந்தனை தனியாக விட்டு தப்பி ஓடியுள்ள கப்புவா.

நீதிமன்றினால் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள ருஹுணு கதிர்காமம் பிரதான விகாரையின் பிரதான கபுவா மற்றும் ஸ்டோர் கீப்பராக இருந்த கபுவா ஆகியோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காமம் ஆலயத்துக்கு பாதாள உலக அங்கொட லொக்காவால் வழங்கப்பட்ட 38 பவுண் தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக இவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தென் மாகாணத்தை விட்டு வெளியேறி வேறு மாகாணத்தில் மறைந்திருப்பதாகவும், அரசியல் ஆதரவுடன் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராகி வருவதாகவும் கதிர்காமம் கோவிலில் உள்ள மற்றுமொரு கப்புவா ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் கதிர்காமம் ஆலயத்துக்கு வருகை தந்த போது, ​​இவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்காதிருந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.