டெல்லி vs பஞ்சாப் போட்டியில் ஆடும் உத்தேச வீரர்கள் லிஸ்ட்

ஐபிஎல் தொடரின் இரண்டவது போட்டி இன்று நடக்கிறது. இதுவரை கோப்பையை வென்றிடாத டெல்லி காப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் பஞ்சாப் மோதுகின்றன. டாலண்ட் அதிக பெற்ற இந்திய வீரர்கள் அதிகம் உள்ள டீம் இவ்விரண்டுமே. கே எல் ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் என இரண்டு முத்தான டாப் ஆர்டர் பேட்ஸ்மான்களே கேப்டன். கும்ப்ளே மற்றும் பாண்டிங்கின் அறிவுரையை செயல்படும் டீம்கள்.

இது பஞ்சாப் டீம்மா அல்லது கருநாடக அணியா என சொல்லும் அளவிற்கு அதிக கருநாடக ஸ்டேட் வீரர்களை உடைய டீம். க்றிஸ் கெயில் விளையாடுவாரா அல்லது வெளியே உட்காரவைக்கப்படுவாரா என யோசிக்கும் அளவிற்கு உள்ளது டீம். ஸ்பின் மற்றும் பேட்டிங்கை நம்பி ஆடும் டீம் இது.

உத்தேச 11 – 1 KL Rahul (capt & wk), 2 Mayank Agarwal, 3 Nicholas Pooran, 4 Glenn Maxwell, 5 Karun Nair, 6 Mandeep Singh, 7 K Gowtham, 8 Sheldon Cottrell /Chris Jordan, 9 J Suchith, 10 Mohammed Shami, 11 Mujeeb Ur Rahman.

டெல்லி காப்பிடல்ஸ் என மாறிய பின் டீம் வேற லெவல் சென்று விட்டது. இளம் வீரராக இருப்பினும் கேபிடேன்ஷிப் மெட்டீரியல் என நிரூபித்துவிட்டார் ஷ்ரேயஸ் ஐயர். ரஹானே, அஷ்வின், அமித் மிஸ்ரா போன்ற சீனியர் வீரர்களை எவ்வாறு டீம்மில் பொறுத்துவார்கள் என சீசன் செல்ல செல்லவே கணிக்க முடியும்.

வேகப்பந்துவீச்சில் சீனியர் இந்திய வீரர் இஷாந்தை தான் பெரிதும் நம்பியுள்ளனர். எனினும் அவருக்கும் அடிக்கடி பிட்னஸ் பிரச்சனை உண்டு. டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை மற்றும் பாஸ்ட் பௌலிங் சரியாக அமையும் பட்சத்தில் கட்டாயம் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள ஒரு டீம்.

உத்தேச 11 – 1 Prithvi Shaw, 2 Shikhar Dhawan, 3 Ajinkya Rahane /Mohit Sharma, 4 Shreyas Iyer (capt), 5 Rishabh Pant (wk), 6 Marcus Stoinis, 7 Axar Patel, 8 R Ashwin, 9 Kagiso Rabada, 10 Sandeep Lamichhane, 11 Anrich Nortje / Shimron Hetmyer.

ட்ரான்ஸபார் விண்டோ வாயிலாக வரும் அஷ்வின் மற்றும் ரஹானேவின் நிலை என்னவென இன்று தெரிந்துவிடும்.

Leave A Reply

Your email address will not be published.