மொட்டு’வின் 25 எம்.பிக்கள் விரைவில் எதிரணிப் பக்கம் – கொழும்பு அரசியலில் பரபரப்புத் தகவல்.

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் இப்போது உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த 25 எம்.பிக்கள் விரைவில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையத் தீர்மானித்துள்ளனர்.

அதன்பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி மிகவும் பலமிக்கக் கூட்டு எதிர்க்கட்சியாகச் செயற்படும்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக – கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.