சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த கில்மிஷா வெற்றி.

ZEETAMIL இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கிக் கொண்டுள்ளார்.

குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா சரிகமப நிகழ்ச்சியில் முதல் இடத்தை பெற்று வெற்றிக்கொண்டுள்ளார்.

அனல் பறக்கும் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்று நேரடி ஒளிபரப்பாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றுள்ளது.

மொத்தம் 6 போட்டியாளர்களில் டைட்டிலுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை தட்டி செல்ல போகும் போட்டியாளர் யார்? என்ற கேள்வி எழும்பிய நிலையில் கில்மிஷா வெற்றியாளரானார்.

இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கிக் கொண்டுள்ளார்.
Video

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட கில்மிஷா வெற்றியாளராகி பலரது மனங்களையும் வென்ற பாடகியாக மாறி பாராட்டு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கில்மிஷாவை Ceylon Mirror வாழ்த்துகிறது

Leave A Reply

Your email address will not be published.