யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ரணில் தலைமையில் விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (04) மாலை நடைபெற்றது.

இதில் பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்த்தன, தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடக்கு மாகாணத்துக்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.