ஒற்றையாட்சியை வலுவிழக்கச் செய்தால் கட்சியில் இருந்து உடனடியாக விலகுவேன் – மொட்டுக்கு வீரசேகர பகிரங்க எச்சரிக்கை.

“ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலான விடயங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்குமானால் அக்கட்சியில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில்தான் இன்னும் இருக்கின்றேன். செயநன்றி கடனுக்காகக் கட்சியில் தொடர்கின்றேன். மொட்டுக் கட்சிதான் வேட்புமனு வழங்கியது. கொழும்பு மாவட்டத்தில் 3 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்றேன். கொழும்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தேன். கட்சி வீழ்ந்திருக்கும் நேரத்தில் அதை விட்டுவிட்டுச் செல்வது நல்லதல்ல.

எனினும், நாட்டைப் பிளவுபடுத்தும், இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதேபோல் ஒற்றையாட்சிக்கு எதிரான விடயங்களுக்குக் கட்சி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கினால் அதன் பின்னர் அங்கு இருக்கமாட்டேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.