திருச்சியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் உதயநிதி!

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் டிவிஎஸ் டோல்கேட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 8 அடிய உயர முழு உருவ சிலை அமைக்கப்பட்டது.

இந்த சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய உதயநிதி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை கண்டாலே சிலருக்கு இப்போதெல்லாம் வயிறு எரிகிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40க்கும் 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வேண்டும் என்ற உறுதி மொழியை கருணாநிதி சிலை முன்பு உறுதியேற்போம் என உதயிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

 

மேலதிக செய்திகள்
சோசல் மீடியாக்களில் மற்றவர்களை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் ஆப்பு!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்

நாடு நெருக்கடியான வேளையில் தென்னிந்திய நடிகைகள் ஏன் வந்தார்கள்? :ஜீவன் தொண்டமான் பதில்

இந்தியா – இலங்கை இடையே விரைவில் பாலம்!

65 போர்க்கைதிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.

அயோத்திக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்

யார் இந்த சனத் நிஷாந்த? : உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

திருச்சியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் உதயநிதி!

Leave A Reply

Your email address will not be published.