பாஜக பிரமுகர் கொலை: கேரளத்தில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை!

கேரளத்தில் பாஜக மாநில தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில ஓபிசி பிரிவின் தலைவராக இருந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவர் 2021 டிச.19ஆம் தேதி அவரது குடும்பத்தினர் முன்னே கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மவேலிக்கரா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் எட்டு பேர் நேரடியாக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் இதில் மறைமுகமாக சம்மந்தப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பு வழக்குரைஞர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், பாஜக ஓபிசி பிரிவு தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் 15 பேரும் குற்றவாளிகள் என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த அஜ்மல், அனூப், அஸ்லாம் ஆவார். இவர்கள் 15 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து ஆலப்புழா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேலதிக செய்திகள்

சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல , புலனாய்வுப் பிரிவினரால் கைது.

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

ஜனாதிபதி பல்கலைக்கழகத்துக்குள் நுழையக் கூடாது : மாணவர் ஒன்றிய போராட்டம்

கழுத்தறுப்புகளை தாண்டி நடந்த குவாதமாலா தேர்தல் வெற்றி : சண் தவராஜா (Video)

ரணில் களனிக்கு வா …… ஜனாதிபதியின் களனிப் பல்கலைக்கழக விஜயத்திற்கு எதிராக, நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்கள் (Video)

Leave A Reply

Your email address will not be published.