குடும்ப ஓய்வூதியத்துக்கு கணவருக்கு பதிலாக குழந்தைகளின் பெயா்: மத்திய அரசு அனுமதி

அரசு ஊழியா்கள் உயிரிழப்புக்குப் பிறகு அவா்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்துக்கு கணவருக்குப் பதிலாக குழந்தைகளின் பெயரை பெண் அரசு ஊழியா்கள் பரிந்துரை செய்யும் வகையில், அரசு ஊழியா்கள் ஓய்வூதிய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெண் அரசு ஊழியா் உயிரிழப்புக்குப் பின், குடும்ப ஓய்வூதியத்தை அவருடைய கணவா் மட்டுமே பெறும் வகையில் சட்டம் இருந்தது. இதில் மத்திய அரசு தற்போது திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெண் அரசு ஊழியா்கள் தனது மகன் அல்லது மகளின் பெயரை குடும்ப ஓய்வூதியம் பெற பரிந்துரை செய்து நியமனம் செய்ய முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘விவாகரத்து அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சிணை தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விவகாரங்களுக்கு எளிதாக தீா்வு காண மத்திய அரசின் இந்த ஓய்வூதிய சட்டத் திருத்தம் உதவும். பெண்களுக்கு சம உரிமையை வழங்கும் வகையில் இந்த சிறப்பான முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது’ என்றாா்.

‘இந்த சட்டத் திருத்தத்தின்படி, ‘தனது இறப்புக்குப் பிறகு குடும்ப ஓய்வுதியத்தை கணவருக்குப் பதிலாக தகுதியுள்ள தனது குழந்தைக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பணிபுரியும் துறையின் தலைமை அலுவலகத்துக்கு பெண் அரசு ஊழியா்கள் எழுத்துபூா்வமாக கோரிக்கை அனுப்ப வேண்டும்’ என்று மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத் துறை தெரிவித்துள்ளது.

மேலதிக செய்திகள்

சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல , புலனாய்வுப் பிரிவினரால் கைது.

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

ஜனாதிபதி பல்கலைக்கழகத்துக்குள் நுழையக் கூடாது : மாணவர் ஒன்றிய போராட்டம்

கழுத்தறுப்புகளை தாண்டி நடந்த குவாதமாலா தேர்தல் வெற்றி : சண் தவராஜா (Video)

ரணில் களனிக்கு வா …… ஜனாதிபதியின் களனிப் பல்கலைக்கழக விஜயத்திற்கு எதிராக, நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்கள் (Video)

ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார்…: ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் பறிமுதல்

‘நாட்டிற்கு ‘ஒரு சவால்’ வரும்போது தூங்குவதில்லை’: சென்னை மாணவா் கேள்விக்கு மோடி பதில்

Leave A Reply

Your email address will not be published.