தரமற்ற மருந்து மோசடிக்கு நீதி கிடைக்கும் வரை காத்திருக்கிறோம் – சஜித் பிரேமதாச

சுகாதாரத்துறையில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் காரணமாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைமையில் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயர்தர மருந்துகளான புபிவாகைன், ஹியூமன் இம்யூனோகுளோபுலின் போன்ற மருந்துகளுக்குப் பதிலாக தரம் குறைந்த மருந்துகளை வழங்கிதால் நுவரெலியா மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் பார்வையிழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்தக் கொள்ளைகளுக்கு இடமில்லை என்றார் அவர்.

சக்வல தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் 81வது கட்டத்தின் கீழ் காலி கிந்தோட்டை மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 வைத்தியசாலைகளுக்கு 1719 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் வைத்தியசாலை உபகரணங்களும், சக்வல பஸ் திட்டத்தின் கீழ் 80 பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பேரூந்துகளுக்கு , 3892 இலட்சம் ரூபாவாக வழங்கப்பட்டுள்ளன.

சக்வால தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் 81 பாடசாலைகளுக்கு வசதியான வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்காக 791 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

More News

மின்சார விநியோகம் மற்றும் பெற்றோலியப் பொருட்கள் விசேட வர்த்தமானி அறிவித்தல்.

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 770 குற்றவாளிகள் கைது.

தாய்லாந்து பிரதமர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

நாளை பல இடங்களில் ரயில்கள் நிற்காமல் இயக்கப்படும்.

டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இலங்கை 212 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கெஹலியவுக்கு விளக்கமறியல்!

மகாராஷ்டிர மருத்துவமனைகளில் போலி மருந்துகள்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கோட்டா நீட் மாணவர் தற்கொலை: விடுதிக்கு சீல்!

ரூ. 29-க்கு 1 கிலோ ‘பாரத்’ அரிசி: அடுத்த வாரம் விற்பனை

சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மற்றொரு படகை மீட்ட இந்திய கடற்படை!

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினார் : ‘தமிழக வெற்றி கழகம்’

Leave A Reply

Your email address will not be published.