ஆற்றில் கிடைத்த சிலை… அயோத்தி ராமர் போலவே விஷ்ணு உருவம்!

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிருஷ்ணா நதியில் விஷ்ணுவின் பழங்கால சிலை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த சிலையுடன் பழமையான சிவலிங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலை போன்றே இந்த சிலையின் சிறப்பம்சங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஷ்ணு சிலை குறித்து ராய்ச்சூர் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை விரிவுரையாளர் டாக்டர் பத்மஜா தேசாய் கூறியதாவது, கிருஷ்ணா நதி படுகையில் காணப்பட்ட இந்த விஷ்ணு சிலை பல சிறப்புகளை கொண்டுள்ளது. இதில் மத்ஸ்ய, கூர்மா, வராஹா, நரசிம்மர், வாமன், ராமர், பரசுராமர், கிருஷ்ணர், புத்தர் மற்றும் கல்கி போன்ற ‘தசாவதாரத்தை’ மகாவிஷ்ணுவைச் சுற்றிலும் காட்சியளிப்பதாக அவர் கூறினார்.

சிலையின் சிறப்பம்சங்களை விரிவாக எடுத்துரைத்த அவர், இச்சிலையில் விஷ்ணு நின்ற நிலையில் நான்கு கரங்களைக் கொண்டுள்ளார். புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் கூறுகையில், இந்த சிலை வெங்கடேஸ்வரரை ஒத்ததாக வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், விஷ்ணு சிலைகளில் பொதுவாகக் காணப்படும் கருடன் இந்தச் சிலையில் இல்லை என்று கூறினார்.

இந்த சிலை ஏதோ ஒரு கோயிலின் கருவறையை அலங்கரித்திருக்க வேண்டும் என்று டாக்டர் தேசாய் கூறினார். கோயிலுக்கு சேதம் ஏற்பட்டிருக்கும்போது ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சிலை கி.பி. 11 அல்லது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேலதிக செய்திகள்

சீனாவுக்கு ஐ.நா பொதுச்செயலாளரின் வாழ்த்துகள்.

காணாமல் போன அமெரிக்க ஹெலிகாப்டர்.

நெதன்யாகு ஹமாஸ் நிபந்தனைகளை தூக்கி எறிந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பீல்ட் மாரஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு.

ஜனாதிபதி அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.