பெண் பொலிஸ் உத்தியோகத்தரை வன்கொடுமை செய்த கல்பிட்டி பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்.

கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த குமாரவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதி அயோனா விமலரத்ன இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் நிலைய பரிசோதகர் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் இருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வரும் குளியாபிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க, சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவருக்கு, குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் நிலைய பரிசோதகர் அழுத்தங்களை ஏற்படுத்துவதை புத்தளம் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதி அயோனா விமலரத்ன இன்று (06) உத்தரவிட்டார்.

வடக்கில் சூரிய மின்கலத் திட்டத்துக்கு சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை! – அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு.

சாந்தனை அழைத்து வர நடவடிக்கை எடுத்தோம்! புற்றுநோயே அவரைப் பலியெடுத்தது!! – இப்படிக் கூறுகின்றது இலங்கை அரசு.

முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரையாவது உயிருடன் விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்புங்கள்! – இந்தியப் பிரதமர், தமிழக முதலமைச்சரிடம் சிறீதரன் வேண்டுகோள்; சாந்தனின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தி உரை.

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை வன்கொடுமை செய்த கல்பிட்டி பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்.

Leave A Reply

Your email address will not be published.