சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி – ரோஹித மீது குற்றச்சாட்டு (Videos)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை அச்சுறுத்தி தாக்குதல் நடத்த முயற்சித்தார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று சபையில் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனவும், இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் சாணயக்கியன் எம்.பி. தெரிவித்தார்.

“பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரைச் சந்திக்கலாம் என்று கூறி தாக்க முற்பட்டார். பிரதமர் என்பவர் சிங்களவருக்குரியவரா? அவர் நாட்டின் பிரதமர் இல்லையா? இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? எனது முறைப்பாடு தொடர்பில் நாடாளுமன்றச் சிறப்புரிமை குழு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் சண்டிதனம் தெரியும். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென ஒழுக்கம் உள்ளது. அது பாதுகாக்கப்பட வேண்டும்.” – என்று சாணக்கியன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

இச் சம்பவம் நடப்பதற்கு முன் நாடாளுமன்றத்தில் , முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் , நாட்டை நாசமாக்கினர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புத்தகம் குறித்து பேசிக் கொண்டிருந்த போது , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன , நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை புலி என குறிப்பிட , ரோஹித அபேகுணவர்தன எம்.பியை , இவன்தான் சங்கிலி திருடிய குக்கா (நாய்க் குட்டி) என ரோஹித அபேகுணவர்தன எம்.பியை , பதிலுக்கு சாணக்கியன் எம்.பி. தாக்கி பேசியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.