வடக்கின் பெரும் சமர் ஆரம்பம்.

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டிகள் இன்று காலை ஆரம்பமாகின.

117 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகின. போட்டிகள் 7,8,9 ஆம் திகதிகள் என மூன்று நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக நடைபெறவுள்ளன.

நேசகுமார் எபனேசர் ஜெஷில் தலைமையிலான யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியும், நிசாந்தன் அஜய் தலைமையிலான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் களமிறங்கியுள்ளன.

போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இரண்டு கல்லூரிக் கீதங்களுடன் ஆரம்பித்ததுடன் இரண்டு கல்லூரி அணி வீரர்களும் கைலாகு கொடுத்து அறிமுகப்படுத்தினர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துக் களமிறங்கியுள்ளது.

மதிய நேர இடைவேளை வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 24 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அணி சார்பில் சிந்துஜன் 25 ஓட்டங்களையும், நியூட்டன் 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் பரியோவான் கல்லூரி சார்பில் கவிசன் 2 விக்கெட்டுகளையும், ரண்டியோ மற்றும் மாதுளன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

போட்டிகள் தொடர்ச்சியாக 7,8,9 ஆம் திகதிகள் என மூன்று நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.