சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னையில் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜூக்கு சம்மந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரைச் சேர்ந்த செல்வராஜ் அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில் ஜவுளி, கட்டுமான நிறுவனமும் நடத்தி வருகிறார்.

ரேஷன் பொருள் வினியோக முறைகேடு, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜூக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னை வேப்பேரி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ஆர்.ஏ புரம், ராஜா அண்ணாமலைபுரம், இ.சி.ஆர் உள்ளிட்ட பத்து இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத் துறை அதிகாரிகள் 7 பேர் சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

வெடுக்குநாறிமலை கோயிலுக்குள் புகுந்த பொலிஸார் : பூசகர் உட்பட 8 பேர் கைது (Photos)

வெடுக்குநாறிமலைக்குக் குடிதண்ணீர் வழங்க மறுத்த பொலிஸார்! பலமணி நேரப் போராட்டத்தின் பின் வந்த உழவு இயந்திரம் விபத்து!! – கஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவர் காயம்

உக்ரைன் போர் : செல்வது பேரழிவை நோக்கியா?

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி

Leave A Reply

Your email address will not be published.