தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடுகள்! – மேலுமொருவர் இலக்கு.

தென்னிலங்கையில் துப்பாக்கிப் பிரயோகம் நாளாந்தம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

ஜாஎல, தடுகம பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.