“பொய் புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பக்தர்கள் போற்றும் அரசாகவும், அற்பர்கள் கதறும் அரசாகவும் திமுக அரசு இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் பரப்புரை மேற்கொண்டார்.

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் இம்முறை வெற்றி பெற வைக்க வேண்டும். தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான். தி.மு.க.விற்கு திருவண்ணாமலை என்றாலே வெற்றி தான். தி.மு.க. வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் திருவண்ணாமலை மக்கள் உறுதுணையாக உள்ளனர். பல்வேறு சிறப்புகளை கொண்டது திருவண்ணாமலை மாவட்டம்.

இந்த தேர்தல் களம், இரண்டாவது விடுதலைப் போராட்டம். இந்தியா என்ற அழகிய நாட்டை, அழித்துவிடாமல் தடுக்க, ஜனநாயக போர்க்களத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஜனநாயக போர்க்களத்தில் மனசாட்சியும் மக்களுமே என்றும் எஜமானர்கள். இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

பா.ஜ.க. ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும். சமூகநீதி காக்க ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய், புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி. அரசியல் சட்டம் காக்க, பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

உத்தர பிரதேசத்தில் போய் கச்சத்தீவு பற்றி பேசும்போதே, பிரதமர் மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது. இது ஏப்ரல் மாதம்தான், மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும். ஜூன் 3-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு, ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம்.

10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் அமலாக்கத்துறை கைதுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் மோடி ஒரு உருட்டு உருட்டியிருக்கிறார். அந்த உருட்டில் பேட்டி எடுத்தவர்களே ஆடிப்போயுள்ளனர். அந்த பேட்டியை பார்த்தவர்கள் இது நியூஸ் டைமா அல்லது காமெடி டைமா என குழம்பிவிட்டனர்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இது மாதிரி பதில் அளிப்பதற்காகவே, அவரை பிரதமர் மோடி அமைச்சராக வைத்திருக்கிறார். சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெளிநாட்டு வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதை திரும்ப செலுத்தப் போவது தமிழ்நாடு அரசுதான். ஆனால், நிர்மலா சீதாராமன் கணக்கு கேட்கிறார்.

மிக்ஜம் புயல், தென்மாவட்ட மழை வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கு மாநில அரசு நிதியைதான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காத நிதி அமைச்சர் நிர்மாலா சீதாராமன், பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார். மக்களை தப்பு கணக்கு போடாதீர்கள்; நீங்கள் சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள். பேரிடர் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஆண்டுதோறும் வழங்கக்கூடிய மாநில பேரிடர் நிவாரண நிதியைக் கொடுத்துவிட்டு, வெள்ள பாதிப்புக்கு நிதி கொடுத்தோம் என்று கூறுவது கரகாட்டக்காரன் படத்தில் வரும் அதுதான் இது என்ற வாழைப்பழ காமெடியை நினைவூட்டுகிறது.

ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் என நாடகம் நடத்த, கூவத்தூர் கவனிப்புகளால், தரையில் ஊர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். பிறகு ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனுக்கு பரப்புரை செய்தார். பிறகு ஓ.பி.எஸ். உடன் சேர்ந்து டிடிவி தினகரனுக்கு எதிராக பரப்புரை செய்தார். அடுத்ததாக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாட்டர் பாட்டில் மரியாதை அளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ். நேரடியாக பா.ஜ.க. கூட்டணியில் சேர, எடப்பாடி பழனிசாமி கள்ளத்தனமாக அந்த கூட்டணியில் இருக்கிறார். இவர்கள் அனைவருமே தமிழ்நாடு மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் இவ்வாறு அவர் கூறினார்.

மேலதிக செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் போட்டியிட்டால் முழு ஆதரவு! – மொட்டு எம்.பி. வீரசிங்க கூறுகின்றார்.

தைவானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; குறைந்தது ஒன்பது பேர் பலி.

எந்த அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்துக்குத் தயார்! – முல்லைத்தீவில் சஜித் தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலும் , பொதுத் தேர்தலும் ஒரே நாளில் : அவர்களுக்கு முக்கியம் அவர்களது எதிர்காலம் : உதய கம்மன்பில

அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்

குடிநீர் தொட்டியில் துர்நாற்றம்; திறந்து பார்த்து அதிர்ந்த அதிகாரிகள் – அதிர்ச்சி சம்பவம்!

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    தமிழ் மக்களை இன்னமும் ஏமாற்றலாம் என்று கனவு காணவேண்டாம் தமிழ் மக்கள் விழித்து விட்டனர் கவனமாக இருக்கவும்

Leave A Reply

Your email address will not be published.