எது நடக்கும் என்று எதிர்பார்த்தோமோ அந்தத் துரதிர்ஷ்டம் நடந்தமை கவலை – ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா விசனம் சுமந்திரனின் நிலைப்பாடு குறித்து எரிச்சல்.

”நாம் எது நடக்கும் என்று எதிர்பார்த்தோமோ, துரதிஷ்டவசமாக அதுவே நடந்து விட்டது. அது கவலைக்குரியது.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான இன்றைய (05) வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியில் கருத்து வெளியிட்டார் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.

இந்த வழக்கில் எதிராளிகளான சிறீதரன் எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பியான யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் இன்றும் முன்னிலையானார்.

இன்றைய வழக்கில் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இந்த வழக்கு தொடர்பில் தமது ஆட்சேபனையைச் சமர்ப்பணமாக எழுத்தில் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்ததையே இவ்வாறு விசனத்துடன் சுட்டிக்காட்டினார் தவராசா.

”சில விட்டுப்புக்கொடுப்புக்களைக் கொடுத்து, கட்சியை நிமிரச் செய்வதற்காகச் சில விடயங்களைக் கடந்த தவணையின்போது நாம் முன்னெடுத்தோம். நாம் எது நடக்கும் என்று எதிர்பார்த்தோமோ துரதிஷ்டவசமாக அதுவே நடந்து விட்டது. இன்று யாராவது எதிராளி வந்து ஆட்சேபனை தெரிவிக்காமல் இருந்திருந்தால் இன்று வழக்கு முடிவடைந்து இருக்கலாம். ஆகவே, எதை நாம் எதிர்பார்த்தோமோ அது நடந்து விட்டது. அது மிகவும் கவலைக்குரிய விடயம். எதிர்வரும் 24ஆம் திகதி நாம் ஆட்சேபனை சமர்ப்பிக்க வேண்டும். அதைச் சமர்ப்பிப்போம்.” – என்றார் தவராசா.

Leave A Reply

Your email address will not be published.