இந்தியாவில் நிகழும் 80% இறப்பிற்கு காரணமாக இருக்கும் 5 நோய்கள்

இந்தியாவில் நிகழும் 80 சதவீத இறப்பிற்கு காரணமாக உள்ள 5 நோய்கள் பற்றி பார்க்கலாம்.

பொருளாதாரம், மக்கள்தொகை, தொற்றுநோயியல் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளும் காலகட்டத்தில் உள்ளது இந்தியா. நாட்டின் சுகாதார அமைப்பை சீரமைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த போதிலும், சமூக மற்றும் பொருளாதாரத்தில் நிலவும் இடைவெளி காரணமாக மருத்துவமனையை அணுகுவதிலும் மூட நம்பிக்கை காரணமாக ஆரம்பத்திலேயே நோய்களை கண்டறிவதிலும் பல சிக்கல்கள் இன்றும் நீடிக்கிறது.

இதுபோதாதென்று காலநிலை மாற்றமும் நோய்களை அதிகமாக்கி கூடுதல் சுமையை உண்டாக்குகிறது. இந்தியாவில் 80 சதவிகித இறப்பிற்கு புற்றுநோய், இதய நோய், டயாபடீஸ், நாள்பட்ட நுரையீரல் சம்மந்தமான நோய்கள் போன்ற 4 தொற்றா நோய்கள் மற்றும் தொற்றுநோயான காசநோய் உள்ளிட்டவை காரணமாக இருக்கிறது.

புற்றுநோய்

2023-ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 14 லட்சம் புற்றுநோயாளிகள் இருக்கிறார்கள். செல்களில் ஏற்படும் அசாதாரணமான மாற்றங்கள் காரணமாக புற்றுநோய் உருவாகிறது. இதில் சில மரபணு ரீதியாகவும் இன்னும் சில காற்று மாசுபாடு, கதிர்வீச்சு, புகைபிடித்தல், பாக்டீரியா, ஒட்டுண்ணி மற்றும் வைரஸ் காரணமாக வருகிறது. புற்றுநோயின் வகை மற்றும் நிலையைப் பொறுத்து இதற்கான சிகிச்சைகளும் மாறுபடும். சீரான உடற்பயிற்சி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது, புகை மற்றும் குடிப்பழக்கத்தை தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்க முடியும்.

இதய நோய்கள்

2022-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12.5% அதிகரித்துள்ளது. பாலினம், வயது, இனம் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவை இதய நோய் வரும் காரணிகளாக அமைகின்றன. வாழ்க்கைமுறை மாற்றங்கள் மருந்து மாத்திரைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இதய நோய்களை குணப்படுத்தக் கூடியதாக இருக்கின்றன. மேலும் ஆண்களை விட பெண்களுக்கு வித்தியாசமான அறிகுறிகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

டயாபடீஸ்

இந்தியாவில் 10.1 கோடிக்கும் மேற்பட்ட நபர்கள் டயாபடீஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் இந்தியாவில் டைப்-2 டயாபடீஸால் தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவகையில் இந்தியாவை உலகின் டயாபடீஸ் தலைநகரம் என்றுகூட சொல்லலாம். வாழ்க்கைமுறை, உடல் பருமன், மரபணு அல்லது இவை மூன்றும் இணைந்து ஒருவருக்கு டயாபடீஸ் நோயை உண்டாக்குகிறது. மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்வதை குறைப்பதன் மூலமும் சீரான உடற்பயிற்சியின் மூலம் டயாபடீஸ் நோய் வரும் ஆபத்தைக் குறைக்க முடியும்.

உடல் பருமன்

நாம் உண்ணும் கலோரிகளுக்கும் அவை எரிக்கப்படுவதற்கும் இடையே உள்ள வித்தியாசம் காரணமாகவே உடல் பருமன் உருவாகிறது. அதிகமாக சாப்பிடுவது, போதுமான உடல் இயக்கம் இல்லாமை ஆகியவை உடல் பருமனுக்கு முக்கிய காரணிகளாகும். சிலருக்கு ஹார்மோன் மற்றும் மரபணு ரீதியாகவும் உடல் பருமன் வரலாம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை டயட்டில் சேர்ப்பதன் மூலமும் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதை குறைப்பதன் மூலமும் உடல் பருமனைக் குறைக்க முடியும். அதுமட்டுமின்றி தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

காசநோய்

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 2.8 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஊட்டச்சத்து குறைபாடு, ஹெஐவி வைரஸ், டயாபடீஸ் போன்றவை காசநோய் வருவதற்கான முக்கிய காரணமாகும். பிசிஜி மற்றும் பல்வேறு வகையான மருந்துகள் மூலம் இந்நோயை குணப்படுத்த முடியும். இந்நோய்களின் வேர்க்காரணங்களை கண்டறிந்து இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி இந்திய மக்களை வழிநடத்திச் செல்ல முடியும்.

மேலதிக செய்திகள்

அம்பிட்டிய சுமணரதன தேரருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ்!

காய்ச்சல் பரவும் அபாயம் : நீண்ட தூர பேருந்து நிறுத்தங்களில் உள்ள உணவகங்களில் இருந்து கவனமாக சாப்பிடுங்கள் : GMOA

அவிசாவளை ஹோட்டல் அறையில் 23 வயது இளம்பெண் மரணம் : சந்தேக நபர் கைது.

மோடியை சந்திக்க வருகிறார் எலான் மஸ்க்!

சு.கவின் அதிகாரம் தற்போது யார் வசம்? – 18 ஆம் திகதி கூடுகின்றது தேர்தல் ஆணைக்குழு.

இன்னும் 4 மாதங்களில் அரசியலுக்குக் ‘குட்பாய்’ – மொட்டு எம்.பி. விமலவீர அறிவிப்பு.

என்யுஎஸ் ஆய்வு: கொவிட்-19 தடுப்பூசி வீரியம் மூத்தோரிடையே விரைவாக குறைகிறது.

$12.5 பி. மோசடி வழக்கு: வியட்னாமியப் பெருஞ்செல்வந்தருக்கு மரண தண்டனை.

சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் அரசு கடப்பாடு கொண்டுள்ளது: சண்முகம்.

இந்தியாவின் 6,000 ஊழியர்கள் மே மாதத்திற்குள் இஸ்‌ரேலை அடைவர்.

தென் கொரியாவின் ஆளும் கட்சிக்கு கடும் தோல்வி.

மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி.

நடிகர் ரஜினியின் ஆதரவை கேட்கும் முயற்சியில், பா.ஜ.க.

தமிழ்ப் பொது வேட்பாளர் யார்? யாழில் இன்று முக்கிய சந்திப்பு.

கக்குவான் இருமல் மீண்டும் தீவிர பரவல்.

Leave A Reply

Your email address will not be published.