இலங்கையில் 1 வடை , 1 தேனீர் (பிளேன்டீ) , 3 டாலரா? (800 ரூபா) : திகைத்து போன வெள்ளைக்காரர் (வீடியோ)

களுத்துறையில் வெளிநாட்டினரை எப்படி சுரண்டி சாப்பிடுகிறார்கள் என்பதை வீடியோ மூலம் உலகுக்கு கூறும் வெளிநாட்டவர்!ஒரு நாடாக நீங்கள் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நினைத்தால், இந்த அணுகுமுறைக்கு முடிவு கட்ட வேண்டும்!

களுத்துறையில் வெளிநாட்டவர் ஒருவரை முதன்மையாக சுரண்டிய ஹோட்டல்காரரின் நடத்தையை , அந்த வெளிநாட்டவர் டிக் டோக் வீடியோ மூலம் உலகுக்கு வெளியிட்டுள்ளார். டிம் டென்ஸ் என்ற இந்த பெல்ஜிய சுற்றுலா பயணி, நாட்டின் நிலமைகள் தொடர்பான ஆவணப்பட நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார்.

அனைத்து நிகழ்வுகளும் நேரலையில் பதிவு செய்யப்படும்போது, ​​இந்த வெளிநாட்டவரை தனது உணவகத்திற்கு அழைக்கும் உணவகக்காரர், உளுந்து வடை ஓன்றை சாப்பிட்டு, தேனீர் ஒன்றைக் குடிக்கும் வெளிநாட்டவரிடம் ஆயிரம் ரூபாய் வசூலிக்க முயற்சிக்கிறார், இந்த விலைகள் நியாயமற்றவை என்று வெளிநாட்டவர் மிகவும் பணிவாகக் கூறும்போது, 800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

அங்கு, வெளிநாட்டைச் சேர்ந்த அந்த நபர் , ஹோட்டல் முன் நின்று, ஒரு உளுந்து வடை விலை எவ்வளவு என்று ஒரு வழியில் செல்வோரிடம் கேட்கிறார். 150 ரூபாய் விலையுள்ள உளுந்துவடைக்கு, 800 ரூபாய் அறவிட்டுள்ளது தெரிய வந்ததும் , கடை உரிமையாளர் 200 ரூபாயை திருப்பிக் கொடுத்தார்.

அதன்போது வெளிநாட்டவர் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுகிறார். “பணம் பிரச்சினை அல்ல. ஆனால் விலையில் ஒரு குறிப்பிட்ட கொள்கை இருக்க வேண்டும். மக்கள் நேர்மையாக இருப்பது முக்கியம்” என்று நாட்டுக்கு கூறுகிறார்.

நாம் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். சுற்றுலா மூலம் ஒரு நாடு கட்டமைக்கப்பட வேண்டுமானால், அந்த நாட்டின் நேர்மை குறித்து பார்வையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதே மிக அடிப்படையான விஷயம். அப்படி இல்லாவிட்டால், எந்த சுற்றுலா வணிகமும் நாட்டையும், மக்களையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் காரணியாக இருக்காது.

அந்த மாதிரியான ஒருவன் தான் நாட்டிற்கு வருகிறான் என்று நினைத்துக்கொண்டு ஒரு இடத்துக்கு செல்லும் வெளிநாட்டவரை கொன்று தின்னும் இந்த நாட்டின் உண்மையான மரபை இந்த வெளிநாட்டவர் எப்படி உலகுக்கு எடுத்துரைத்துள்ளார் என்பதை பின்வரும் காணொளியில் காணலாம்.

சுற்றுலாவுக்காக வெளிநாட்டவரை ஈர்க்கும் மனோபாவத்தின் அடிப்படையில் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதை அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

வீடியோ

Leave A Reply

Your email address will not be published.