இஸ்ரேல் மீது ஈரானிடமிருந்து 200 ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரான் பதிலடித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்குச் சென்ற ஈரானிய ஆளில்லா விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக தெரிய வருகிறது.

ஈரானிய அரசு ஊடகம் அவர்கள் தங்கள் முதல் சுற்று *பாலிஸ்டிக்* ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியுள்ளனர்.

ஈரானிய விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக இஸ்ரேலிய விமானங்கள் தற்போது இஸ்ரேலிய வான்வெளியில் பறந்து வருகின்றன

ஈரான் மற்றும் ஈராக்கில் இருந்து டஜன் கணக்கான ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேலிய உளவுத்துறை கண்டறிந்துள்ளது

இஸ்ரேல் மீது ஈரான் 200க்கும் மேற்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

பெரும்பாலானவை தங்கள் வான் எல்லைக்குள் நுழைவதை இஸ்ரேல் தடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இராணுவத் தளம் சிறிதளவு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான தாக்குதல்களில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

தற்போது, ​​பல நாடுகள், மத்திய கிழக்கு வான்வெளிக்குள் தங்கள் விமானங்கள் நுழைவதை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

மேற்குலகில் உள்ள இஸ்ரேலின் நட்பு நாடுகளும், ஐக்கிய நாடுகளின் அலுவலகமும் ஈரான் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டம் இன்று (14) பிற்பகல் நடைபெறவுள்ளது.

மேலும், ஈரான் தாக்குதலுக்கு கணிசமான பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் அதிகாரிகள் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலும் இடம்பெற்றுள்ளது.

அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மில்லே இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.