பயணியர் பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து தப்டான் செல்லும் நோஷ்கி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று ஒரு பயணியர் பஸ் சென்றது. அப்போது அங்கு வந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், பஸ்சை மறித்து அதிலிருந்த, 11 பயணியரை, மலைப் பகுதிக்கு இழுத்துச் சென்றனர். இந்த 11 பேரின் உடல்கள், மலைப் பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில், இதே நெடுஞ்சாலையில் ஒரு கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், இரு பயணியர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் புரட்சிகர படை, பாகிஸ்தானி தலிபான் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.