50 ரூபாய்க்காக கடைக்காரரின் விரலைக் கடித்த கஸ்டமர்

உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் 50 ரூபாய்க்காக கடைக்காரரின் விரலை ஒருவர் கடித்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள துணிக்கடையில் நபர் ஒருவர் ஆடை ஒன்றை எடுத்து சென்றுள்ளார். மறுநாள் மீண்டும் கடைக்கு வந்த அதே நபர் ஆடையின் அளவு சிறியதாக இருப்பதாக கூறி பெரிய அளவு ஆடையை கேட்டுள்ளார். அதற்கு கடையின் உரிமையாளர் பெரிய அளவு ஆடைக்கு கூடுதலாக 50 ரூபாய் அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் இடையே ஆடை வாங்க வந்த நபர் கடை உரிமையாளரின் விரலை கடித்ததோடு அவரது மகனின் விரலையும் கடித்துள்ளார். தகராறுக்கு காரணமான ஆடையை கடைக்கு வெளியெ சாலை எறிந்து விட்டு அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்த கடை உரிமையாளர் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். குற்றவாளி கிடைத்ததும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.