முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாள்கள்: சூடுபிடிக்கும் பிரசாரம்

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாள்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று நெல்லை வந்து, அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுளள்ளார்.

இந்த நிலையில், சங்கல்ப பத்திரம் என்ற பெயரிதல், பாஜக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில் 70 வயதைக் கடந்த முதியோர் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவக் காப்பீடு, இலவச ரேஷன் விநியோகத் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகம், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். புதுவையில் காலை 11.30 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றவுள்ளார்.

கடலூர் தொகுதியிலும், பிறகு விழுப்புரத்திலும் மல்லிகார்ஜுன கார்கே இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகத்தில் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை மாலை திருவண்ணாமலை செல்லும் ராஜ்நாத் சிங், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு ஆதரவாக மாலை 4 மணியளவில் பிரசார பேரணி நடத்துகிறார்.

பிறகு தாம்பரம் வந்து தமாகா வேட்பாளர் வி.என். வேணுகோபாலுக்கு ஆதரவாக பிரசார பேரணி நடத்துகிறார்.

மேலதிக செய்திகள்

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

50 ரூபாய்க்காக கடைக்காரரின் விரலைக் கடித்த கஸ்டமர்

மேகா இன்ஜினியரிங் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Leave A Reply

Your email address will not be published.