உயிரிழந்த பாலித தெவரப்பெரும யார்? என்ன நடந்தது?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இறக்கும் போது அவருக்கு வயது 64.

அவரது சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மத்துகமவில் உள்ள தனது இல்லத்தில் இரண்டு மின் சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

1960 ஆம் ஆண்டு பிறந்த பாலித்த தெவரப்பெரும, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார்.

அவரது மகன் ஆகஸ்ட் 2015 இல் டெங்கு நோயால் இறந்தார், அதன் பின்னர் அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார்.

2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மைத்ரி சில மாற்றங்களை கொண்டு வந்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய போது,  உள்நாட்டில் ஏற்பட்ட மோதலால் ஒரு வார காலம் பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது. நவம்பர் 15, 2018 அன்று, நாடாளுமன்ற அமளியின் போது, ​​அவர் கையில் ஒரு கத்தியை பயன்படுத்த முயன்றதான குற்றச்சாட்டுக்கு ஆளானார். அது கத்தியல்ல , கடிதங்களை திறக்கும் ஒரு பொருள் என தெரியவந்தது.

ஜூலை 2016 இல், 9 குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க மறுத்த போது , அந்த அதிகாரிகளை கட்டாயப்படுத்தி  குழந்தைகளை சேர்க்குமாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார் .

அப்படியும் அதிகாரிகள் 9 குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்க்காத நிலையில்,  அவர் அரசுப் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இச்சம்பவத்தின் பின்னரே மாணவர்கள் பாடசாலையின் தரம் 1 இல் அனுமதிக்கப்பட்டனர்.

2020 கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலத்தில் , ​​ கோவிட் தொற்று காரணமாக மூடப்பட்ட அட்டலுகம கிராமத்தின் மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகித்தார்.

பாராளுமன்ற கட்டிடத்தினுள் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ரணில் விக்கிரமசிங்கவை இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றார். அப்போது அவரை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தடுத்து நிறுத்தியதாக தெரியவந்தது. அந்த பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமதான். வேட்புமனு தாக்கல் தொடர்பான பிரச்சனையே இதற்கு காரணம் என்று கூறப்பட்ட போதும்  , பாலித தெவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்து சஜித் சார்பான நிலையில் நடந்த பிரச்சனையே அதுவாகும்.

இனக்கலவரங்கள் ஏற்படும் போது இனவாதிகளிடமிருந்து காப்பாற்ற களம் இறங்கிய ஒருவராக பாலித தெவரப்பெரும திகழ்கிறார். வடக்கில் வெள்ளம் ஏற்பட்ட போது பாலித தெவரப்பெரும அங்கு சென்று உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

ஒரு அரசியல்வாதி என்பதை தாண்டி , மனிதநேயத்தோடு மக்கள் மனதை ஈர்த்தவராக பாலித தெவரப்பெரும இருந்து வந்தார்.

அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

Leave A Reply

Your email address will not be published.