சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஆரியரத்ன அவர்களது இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை

இன்று (16) பிற்பகல் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன காலமானார்.

அவரது இறுதிச் சடங்கிற்கு அரச ஆதரவை வழங்க பிரதமரும் ஜனாதிபதியும் தீர்மானித்துள்ளனர்.

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேற்கொள்ளும் என அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடல் முதலில் மொரட்டுவை சர்வோதய தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாருக்கு எமது அஞ்சலிகள்

Leave A Reply

Your email address will not be published.