அதிக வாக்குகள் பதிவான தொகுதிகள்: முதலிடத்தில் ஸ்ரீபெரும்புதூர்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 19-ந்தேதி காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 69.72 விழுக்காடு பதிவானதாக இறுதியாக தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பதிவான தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 14 லட்சத்து 35 ஆயிரத்து 243 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 30 ஆயிரத்து 030 ஆகும். வாக்கு விழுக்காடு 60.25ஆக உள்ளது.

அதிக வாக்குகள் பதிவான தொகுதிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் திருவள்ளூர் உள்ளது. இந்த தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 30 ஆயிரத்து 738 வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு சதவிகிதம் 68.59 சதவிகிதமாகும். திருவள்ளூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 23 ஆயிரத்து 795 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 06 ஆயிரத்து 852 பேரும் வாக்களித்துள்ளனர்.

இந்த பட்டியலில் 3-வது இடத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதி வருகிறது. கோவை தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 83 ஆயிரத்து 034 ஆக உள்ளது.

மேலதிக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடியாக பொங்கிய ஈரான்

Leave A Reply

Your email address will not be published.