எஸ்பிபி விஷயத்தில் கடும் விமர்சனத்தால் நிலைகுலைந்த அஜித்

அஜித் தமிழ் சினிமாவில் இன்று இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளங்களுடன் வலம் வருகிறார் என்றால் அதற்கு அச்சாரம் போட்டது எஸ் பி பாலசுப்ரமணியம் தான்.

இதை தல அஜித் வெளியில் சொல்லிக் கொள்ள வில்லை என்றாலும் எஸ்பிபி நிறைய இடங்களில் இதை தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தல அஜித் மற்றும் எஸ்பிபி மகன் சரண் ஆகிய இருவரும் பள்ளிப்பருவ நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் எஸ்பிபி இறந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் பிரபலங்கள் யாரும் பெரும்பாலும் எஸ்பிபி பார்க்க செல்ல முடியாத நிலையில் இருந்ததால் சமூக வலைதளங்களில் அவர்களது இரங்கலை தெரிவித்தனர்.

ஆனால் தளபதி விஜய் மற்றும் தல அஜித் எந்த ஒரு விஷயமும் செய்யவில்லையே என ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்த நிலையில் விஜய் நேரடியாக சென்று தன்னுடைய விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதில் மிகவும் பாதிக்கப்பட்டது தல அஜித் தான். மிக நெருங்கிய நபராக இருந்த எஸ் பி பி யை கூட அஜித் சந்திக்கவில்லை என்றால் எப்படி எனும் அளவுக்கு அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இன்னும் சொல்லப்போனால் தல அஜித் ரசிகர்களே அஜித் மீது அதிருப்தி கொண்டது இந்த செயலில் தான். ஆனால் எஸ்பிபி இறந்தது கேட்டு தல அஜித் மிகவும் சோகத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும் விரைவில் எஸ்பிபி வீட்டுக்கும் அவரது நினைவிடத்திற்கும் செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தன்னுடைய சொந்த விவகாரங்களுக்கு அறிக்கை விடும் அஜித் ஏன் எஸ்பிபி இறந்ததற்கு இரங்கல் அறிக்கை கூட தெரிவிக்கவில்லை என்பதுதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.