எஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலே போன சோகம்

எஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்!!

உலகமே போற்றும் எஸ்பிபியின் புகழாரத்தை பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.. எல்லாவித பாராட்டையும், வாழ்த்தையும், விருதையும், பெற்ற எஸ்பிபிக்கும் ஒரு ஆசை இருந்துள்ளது.. அந்த கடைசி ஆசையும், கடைசி வரை நிராசையாகவே காற்றில் கரைந்துவிட்டது. மிகக்குறுகிய காலத்திலேயே சிறந்த பின்னணிப்பாடகராக உருவெடுத்தவர் எஸ்பிபி.!

ஒரு பாட்டுக்காக பல நாள் ஏங்கி காத்திருந்தவர், ஒரே நாளில் 19 பாடல்களை பாடும் அளவுக்கு பிஸியாகிவிட்டார்.. இது தமிழில் மட்டும்தான்.ஆனால், அதாவது 6 மணி நேரத்தில் 16 பாடல்களை பாடும் அளவுக்கு ஹிந்தியிலும் பிஸியானவர்.அதுமட்டுமல்ல, காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்குள் 21 பாடல்களை பாடும் அளவுக்கு கன்னடத்திலும் பிஸியியானவர். இப்படி தென்னிந்தியாவையே தன் குரலால் கட்டிபோட்டிருந்தார் எஸ்பிபி.இதைதவிர, வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.மொழி தெரியாதவர்கள் கூட, இந்த குரலில் விழுந்து கிடந்தனர்.

அவர்களுக்கான நிகழ்ச்சிகளையும் பல நாடுகளில் நடத்தியவர், சமீப காலமாகவும் அவ்வாறு வெளிநாட்டுக்கும் சென்று வந்தவர்.இதனால் கடந்த 20 வருஷங்களில் அதிக முறை ஃபிளைட்டில் பயணம் செய்பவர் என்று எஸ்பிபியை சொல்வார்கள்.ரிக்கார்டிங் இல்லாத சமயத்தில், எல்லாம், அவர் வெளிநாட்டுக்கு உடனே நிகழ்ச்சிக்காக பறந்துவிடுவாராம்.அவர் போகாத நாடு இல்லை.

உலகமெல்லாம் பறந்து பறந்து பாடினார்.. ஆனாலும் அவர் போகாத ஒரே நாடு ரஷ்யாதானாம்.. அந்த ஒரு நாட்டுக்கு மட்டும் சென்றுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கான வாய்ப்பும் எப்படியும் வந்துவிடும் என்றும் நம்பிக் கொண்டிருந்தாராம்.ஆனால், அது நடக்கவே இல்லை.. “எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப் போச்சு?” என அடிக்கடி சொல்லி குறைபட்டுக்கொண்டே இருப்பாராம்.. கடைசிவரை ரஷ்ய மண்ணில் அவர் காலடி படாமல் உயிர் போய்விட்டது.. அவரது ஆசையும் நிறைவேறாமலேயே போய்விட்டது!

Leave A Reply

Your email address will not be published.