மோடிக்கு 8 முறை வாக்களித்த 17 வயதுச் சிறுவன் கைது (Video)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) கட்சிக்கு 8 முறை வாக்களித்த 17 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

அந்தச் சிறுவன் வாக்களிக்கும் வயதை எட்டவில்லை.

சிறுவன் பாரதிய ஜனதா கட்சிக்கு 8 முறை வாக்களித்த காணொளி இணையத்தில் பரவியது.

சம்பந்தப்பட்ட வாக்களிப்பு நிலையத்தின் அதிகாரிகள் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாக்களிப்பு நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்கக் குறைந்தது 18 வயதாகியிருக்க வேண்டும்.

சிறுவன் தான் ஒவ்வொரு முறையும் வாக்களிப்பதைக் காணொளி எடுத்திருக்கிறார்.

இந்தியத் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் என்பதையும் விதிமுறைகளை முறையாக அமல்படுத்துவதில்லை என்பதையும் அந்தச் சம்பவம் காட்டுவதாக எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் குறைகூறினர்.

Leave A Reply

Your email address will not be published.