கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் பெறவே இவ்விரத்தினை அனுஷ்டிக்கின்றனர்.

சிவன் பார்வதியைப் போல கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் பெறவே இவ்விரத்தினை விரும்பி அனுஷ்டிக்கின்றனர் பெண்கள்.

ஆதர்ச தம்பதிகளாக ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழும் பேற்றை தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்சனையுள்ளவர்கள் இவ்விரதத்தினனை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபீட்சமான வாழ்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இவ்விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். மணமாகிய பெண்கள், தங்கள் மாங்கல்யம் நீடிக்கவும், மணமாகாத பெண்கள் நல்ல வாழ்கை அமைய வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். இதே காரணத்துக்காக ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

கேதார கௌரி விரதத்தை ஐந்து மாதங்களுக்குள் கர்ப்பிணியாக இருக்கும் பெண்களும், மாதவிலக்கு நின்ற பெண்களும் 21 நாட்கள் விரதமிருந்து பூஜிக்கலாம். மற்றவர்கள், அமாவாசைத் திதிக்கு முன்னுள்ள 9 நாட்களோ 7 நாட்களோ மூன்று நாட்களோ அல்லது கேதார கௌரி தினத்தன்றோ இவ் விரதத்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம்.

கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்டிக்கலாம். விரத காலத்தில் தீய பேச்சுக்கள் எதையும் பேசாமல், “ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் தம்பதிகளை விட, ஒற்றுமையில்லாமலோ அல்லது தம்பதியரில் ஒருவர் பிணியால் அவதிப்பட்டாலோ அவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டு ஒற்றுமையையும், சகல சௌபாக்யங்களையும் பெறலாம். இது இந்த விரதம் இருந்து அனுபவப்பூர்வமாக உணர்ந்த பலரும் கூறும் கூற்றாகும்.

Leave A Reply

Your email address will not be published.