2020-21 அட்டவணையை வெளியிட்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.

 

2020-21 சீஸனுக்காக அட்டவணையை வெளியிட்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் முதல் எந்தவொரு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடாமல் உள்ளது நியூசிலாந்து அணி. இந்நிலையில் 2020-21 சீஸனுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.

நவம்பர் இறுதி முதல் மார்ச் இறுதி வரை நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா இரு டெஸ்டில் விளையாடுகின்றன.

நியூசிலாந்தின் 2020-21  அட்டவணை

vs மேற்கிந்தியத் தீவுகள் 

டி20 தொடர் – நவம்பர் 27, 29, 30

டெஸ்ட் தொடர் – டிசம்பர் 3, 11

vs பாகிஸ்தான்

டி20 தொடர் – டிசம்பர் 18, 20, 22

டெஸ்ட் தொடர் – டிசம்பர் 26, ஜனவரி 3

vs ஆஸ்திரேலியா

டி20 தொடர் – பிப்ரவரி 22, 25, மார்ச் 3, 5, 7

vs வங்கதேசம்

ஒருநாள் தொடர் – மார்ச் 13, 17, 20

டி20 தொடர் – மார்ச் 23, 26, 28

Leave A Reply

Your email address will not be published.