நீதி அதிகாரம் கிராமத்திற்கு வழங்கப்படும்.. மக்களிடம் சட்டங்களை இயற்றி நிறைவேற்றவிடுவோம்.. அதை முறைப்படுத்துவோம்..- JVPயின் கே.டி.லால்காந்த் (Video)

நீதி அதிகாரம் கிராம மக்கள் கைகளுக்கு செல்ல வேண்டும் எனும் கருத்தில் எதுவித மாற்றமும் இல்லை என தேசிய மக்கள் படையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

குண்டசாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிராம மக்கள் வரை அதிகார வரம்பு இருக்க வேண்டும். இது தற்போது மாஜிஸ்திரேட் கோர்ட் வரை மட்டுமே சென்றுள்ளது. அவர்கள் இன்னும் கீழே செல்ல வேண்டும். அதில் எந்த சர்ச்சையும் இல்லை. எந்த பிரச்சினையும் இல்லை.

அரசியல் அதிகாரம் அடிதட்டு வரை போக வேண்டும், சட்டமன்ற அதிகாரம் மேலும் கீழிறங்க வேண்டும். பிரபு வகுப்பினரின் நலனுக்காக இது அதிகமாக செயல்படுகிறது. அந்த அதிகாரத்தை மக்கள் பெற வேண்டும்.

இப்போதும், மக்கள் மரணச் சங்கங்களின் சட்டங்களை உருவாக்கி, சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள். சமூகங்களில் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் இவர்கள்.

வாழ்க்கை என்பது மரணம் மட்டுமல்ல. இவை அனைத்தையும் கையாளக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அவர்களால் தங்கள் அரசியலமைப்பை உருவாக்க முடிய வேண்டும். அவற்றை நீங்களே செயல்படுத்தலாம். அவற்றை நீங்களே மெருகூட்டலாம்.

உள்ளவற்றை முறைப்படுத்தி மேலும் மேலும் விரிவுபடுத்தி அந்த வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார் தேசிய மக்கள் படையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த .

Leave A Reply

Your email address will not be published.