யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்த நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள்!

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் புறக்கணித்தனர்.

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் யாழ். மாவட்டத்தில் பணியாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை.

நிர்வாக சேவை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ். மாவட்ட கடமை நிறைவேற்று அரச அதிபர் ம.பிரதீபன் மற்றும் வடக்கு மாகாண சபையைச் சேர்ந்த பொ.வாகீசன் ஆகிய இரண்டு அதிகாரிகள் மாத்திரமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.