கிளிநொச்சியில் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்துக்கு முன்பாக ஏ – 9 வீதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது சொந்தங்களின் படங்களையும் பதாகைகளையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.