முதலாவது T20 உலககோப்பை கிரிகெட் போட்டியில் கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி!

டி20 உலகக் கோப்பை இன்று முதல் 29-ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா உட்பட 20 அணிகள் பங்கேற்கிறது. இதில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளது.

குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் என போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய அணி ‘குரூப்-ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அங்கம் வகிக்கிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. முதலாவதாக டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஆரன் ஜான்சன் மற்றும் நவனீத் தலிவால் களமிறங்கினர். ஆரன் ஜான்சன் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க நவனீத் அரைசதம் கடந்த நிலையில் 61ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா வீரர்களில் நிக்கோலஸ் கிர்டான் மற்றும் ஸ்ரேயஸ் முவ்வா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 20 ஓவர்களின் முடிவில் கனடா அணி 5விக்கெட்களை இழந்து 194ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 195ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களமிறங்கியது.

அமெரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்டீவ் டெய்லர் மற்றும் மோனக் படேல் ஆகியோர் களமிறங்கினர். ஸ்டீவ் டெய்லர் டக் அவுட் ஆகி வெளியேற இதனைத் தொடர்ந்து மோனக் படேலும் 16ரன்களுக்கு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ஆண்டிரியஸ் கோஸ் அதிரடியாக விளையாடி ரன்களின் எண்ணிக்கையை மளமளவென உயர்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 17.4 ஓவர்களிலேயே 7விக்கெட் வித்தியாசத்தை இலக்கை எளிமையாக எட்டி முதல் வெற்றியை தன்வசமாக்கியுள்ளது அமெரிக்க அணி. ஆட்ட நாயகனாக 40 பந்துகளில் 94ரன்கள் விளாசிய ஆரன் ஜோன்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.