கடத்தப்பட்ட 4 பிணையாளிகளை மீட்டது இஸ்ரேல் (Video)

2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணையாளிகளில் 4 பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது.

அந்தத் தகவலை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டது.

25 வயது நோவா அர்காமனி (Noa Argamani), 21 வயது அல்மொக் மேர் ஜான் (Almog Meir Jan), 21 வயது ஆண்டிரே கொஸ்லொவ் (Andrei Kozlov), 40 வயது ஸ்லொமி ஸிவ் (Shlomi Ziv) ஆகியோர் மீட்கப்பட்டனர்.

மத்திய காஸா வட்டாரத்தில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அவர்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

நால்வரும் Nova இசை நிகழ்ச்சியின்போது கடத்திச் செல்லப்பட்டவர்கள் என்று BBC தெரிவித்தது.

அவர்களின் உடல்நிலை சீராய் உள்ளதாகவும் பரிசோதனைக்காக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் இஸ்ரேலியத் தற்காப்புப் படை கூறியது.

காஸாவில் ஹமாஸுடன் இஸ்ரேல் ராணுவம் எட்டு மாதமாகப் போரிடும் வேளையில் அந்த அரிய மீட்பு நடவடிக்கை வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.