iPhoneஇல் ChatGPT – Apple நிறுவனத்தின் புதிய முயற்சி

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் துரத்திச்செல்லும் நிறுவனங்களின் வரிசையில் Apple அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.

iPhone தயாரிப்பு நிறுவனமான அது Siri செயலியையும் மேலும் சில அம்சங்களையும் மேம்படுத்தியிருக்கிறது.

“Apple Intelligence” என்று அழைக்கப்படும் அந்தப் புதிய AI முறையின்கீழ் பயனீட்டாளர்கள் Apple சாதனங்களை இன்னும் எளிதாகப் பயன்படுத்தமுடியும் என்று கூறுகிறது .

OpenAI நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் iPhone, Mac ஆகியவற்றின் செயல்பாடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதன்வழி அந்தச் சாதனங்களில் ChatGPTயைப் பயன்படுத்த முடியும்.

உரை (text), உள்ளடக்க உருவாக்கம் (content generation) ஆகியவற்றின் ஆற்றலை மேம்படுத்தவும் ChatGPTயைப் பயன்படுத்தலாம்.

அவற்றைச் சோதித்துப் பார்ப்பதற்கான வசதி செப்டம்பரிலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.