OpenAI அம்சங்கள் கொண்ட Apple திறன்பேசிகள் Teslaஇல் தடை செய்யப்படும்: இலோன் மஸ்க்.

Tesla நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் (Elon Musk), OpenAI அம்சங்கள் கொண்ட Apple திறன்பேசிகள் தமது நிறுவனத்தில் தடை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

OpenAI அம்சங்களை Apple பொருள்களில் இணைப்பது ஏற்க முடியாத பாதுகாப்பு அத்துமீறல் என்று மஸ்க் கூறினார்.

Tesla நிறுவனத்துக்குள் நுழைவோர் Apple பொருள்களை மின்காந்தத்தைத் தடுக்கும் கூண்டில் வைத்துவிடவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

திரு மஸ்க்கிற்கும் OpenAI நிறுவனத்துக்கும் இடையே சிக்கல் நிறைந்த நீண்ட வரலாறு உண்டு.

சாம் ஆல்ட்மேன் (Sam Altman) என்பவருடன் 2015ஆம் ஆண்டு OpenAI நிறுவனத்தை மஸ்க் தொடங்கினார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்புப் பங்காளித்துவம் பத்தாண்டுக்கு முன் முடிந்தது.

மனிதர்களுக்குப் பயன்தரும் வகையில் செயல்படப்போவதாகக் கூறிய வாக்குறுதியை மீறியதாக OpenAI நிறுவனம் உள்பட அதன் தலைமை நிர்வாகிமீது திரு மஸ்க் வழக்குத் தொடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.