கல்கத்தா அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கல்கத்தா அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், கல்கத்தா அணிகள் மோதின.

ராஜஸ்தான், கோல்கட்டா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

கல்கத்தா அணிக்கு சுப்மன் கில் 47, இயான் மோர்கன் 34, ரசல் 24 கைகொடுக்க 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட் கைப்பற்றினார்.
சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு டாம் கர்ரான் (54) அரைசதம் கடந்து கைகொடுத்தார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (3), சஞ்சு சாம்சன் (8), உத்தப்பா (2), டிவாட்டிய (14) ஏமாற்ற, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. கல்கத்தா சார்பில் ஷிவம் மாவி, நாகர்கோட்டி, வருண் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.