விறுவிறுப்பாக நடைபெறும் EURO 2024 காற்பந்துப் போட்டி

ஜெர்மனியில் EURO 2024 காற்பந்துப் போட்டி தொடங்கியிருக்கிறது.

EURO 17ஆவது முறையாக நடைபெறுகிறது.

இதற்கு முன்பு மேற்கு ஜெர்மனியில் EURO 1988ல் இடம்பெற்றது. 1989ல் இரண்டு ஜெர்மனிகளும் ஒருநாடாக மாறியபின் அங்கு EURO இடம்பெறுவது இதுவே முதல்முறை.

ஜெர்மனி இதுவரை 3 முறை EURO கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

1972ல் EURO தொடங்கியபோது ஜெர்மனி வென்றது. பிறகு 1980ல் வென்றது. கடைசியாக ஒன்றுபட்ட ஜெர்மனி 1996ல் வென்றது.

ஜெர்மனியின் 10 நகரங்களில் EURO 2024 போட்டி நடக்கிறது.

அடுத்த மாதம் 14ஆம் தேதி 71,000 பேர் அமரக்கூடிய தலைநகர் பெர்லின் அரங்கில் இறுதியாட்டம் நடைபெறும்.

இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களின் முடிவுகள்:

⚽ ஜெர்மனி 5, ஸ்காட்லந்து 1

⚽ ஸ்விட்சர்லந்து 3, ஹங்கேரி 1

⚽ ஸ்பெயின் 3, குரோஷியா 0

⚽ இத்தாலி 2, அல்பேனியா 1

Leave A Reply

Your email address will not be published.