காணாமல் போன இந்திய இராஜதந்திர அதிகாரிகள் பாகிஸ்தான் உளவுத்துறையின் காவலில் உள்ளனர்

இன்று காலை முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இரண்டு அதிகாரிகளை பாகிஸ்தான் புலனாய்வு பிரிவின் (ஐ.எஸ்.ஐ) கீழ் உள்ளதாக தெரிய வருகிறது. இன்று பிற்பகல் ஐ.எஸ்.ஐ. இதை உறுதி செய்துள்ளது.

உளவு பார்த்தமை தொடர்பாக இந்தியாவிலுள்ள இரு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் இராஜதந்திரிகளை இந்தியா நாடு கடத்த இருந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் உளவு அமைப்பால் இரு இந்திய இராஜதந்திர அதிகாரிகளை பாகிஸ்தான் உளவுதுறை கைது செய்யதுள்ளதாக சர்வ தேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments are closed.