பெங்களூரு அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி.

டில்லி அணிக்கு எதிராக ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு, ஸ்ரேயாசின் டில்லி அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி கப்டன் கோஹ்லி, களத்தடுப்பை தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியில் அடம் ஜாம்பா, குர்கீரத்மானுக்குப் பதில் மொயீன் அலி, முகமது சிராஜ் சேர்க்கப்பட்டனர். டில்லி அணியில் அமித் மிஸ்ராவுக்குப் பதில் அக்சர் படேல் இடம் பெற்றார்.டில்லி அணிக்கு தவான் (32), பிரித்வி ஷா (42) இணைந்து கலக்கல் துவக்கம் தந்தனர். ஸ்ரேயாஸ்(11) விரைவாக நடையை கட்டினார். டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. ஸ்டாய்னிஸ் (26 பந்தில் 53 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. அஷ்வின் பந்தில் இளம் நட்சத்திரம் தேவ்தத் படிக்கல்(4) அவுட்டானார். பின்ச் (13), டிவிலியர்ஸ் (9), மொயீன் அலி (11) விரைவில் திரும்பினர். கோஹ்லி அதிகபட்சம் 43 ரன் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. டில்லி அணியின் ரபாடா, 4 விக்கெட் வீழ்த்தினார்.

Leave A Reply

Your email address will not be published.