கல்கத்தா அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கல்கட்டா அணி 2 ஓட்டஙகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபுதாபியில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், கல்கட்டா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கல்கட்டா அணி கப்டன் தினேஷ் கார்த்திக், துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
கல்கட்டா அணிக்கு சுப்மன் கில் (57), தினேஷ் கார்த்திக் (58) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கப்டன் லோகேஷ் ராகுல் (74), மயங்க் அகர்வால் (56) கைகொடுத்த போதும், 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.