மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராகிறார் ரூபன் அமோரிம்.
மென்செஸ்ட்டர் யுனைட்டட் காற்பந்து அணி, போர்ச்சுகலைச் சேர்ந்த ரூபன் அமோரிமை (Ruben Amorim) அதன் புதிய பயிற்றுவிப்பாளராக இன்று (1 நவம்பர்) அறிவித்துள்ளது.
39 வயது அமோரிம் இம்மாதம் 11ஆம் தேதி அணியில் சேரவிருக்கிறார்.
2027ஆம் ஆண்டு வரை அவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
“அமோரிம் ஐரோப்பாவில் சிறந்த இளம் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவர். அவர் அணியில் சேரும் வரை ரூட் வென் நிஸ்டல்ரோய் (Ruud van Nistelrooy) தற்காலிகப் பயிற்றுவிப்பாளராகச் செயல்படுவார்,” என்று அணி தெரிவித்தது.
அண்மையில் மென்செஸ்ட்டர் யுனைட்டட் காற்பந்து அணி, அதன் பயிற்றுவிப்பாளர் எரிக் டென் ஹாக்கை (Erik ten Hag) பொறுப்பிலிருந்து நீக்கியது.