பொது போக்குவரத்து பயணிகளுக்கு விரைவில் உத்தேச பயண அட்டைகள்

பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கான உத்தேச பயண அட்டையை ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னர் அறிமுகப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளை பணித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் பணபுலக்கத்தை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

போக்குவரத்து சேவைகளுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த நீண்டகாலமாக முயற்சித்த போதிலும் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

அதனை அறிமுகப்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவென போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முற்கொடுப்பனவு அட்டைகள் அச்சிடப்படுவதன் மூலம் பணம் அச்சிடுவதற்கான செலவையும் குறைக்க முடியுமென இதன்போது தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.