நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பகுதியில் அமரப் போகும் 43 திசைகாட்டிகள்..
இந்த ஆண்டு தேசிய மக்கள் சக்திக்கு தெரிவாகியுள்ள 159 எம்.பி.க்களை ஆளும் கட்சி பாராளுமன்ற பகுதியில் அமர வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆளும் கட்சியைச் சேர்ந்த 43 பேர், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிப் பக்கத்தில் அமர உள்ளனர்.
ஆளும் கட்சி பகுதியில் 116 எம்பிக்கள் மட்டுமே அமர முடியும்.
10வது பாராளுமன்றம் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினம் மக்கள் பிரதிநிதிகள் சபையில் அவர்கள் விரும்பியவாறு ஓரிடத்தில் அமரலாம்.
அதன் பின்னர் முறையான அமர்வு ஏற்பாடுகளை நாடாளுமன்றம் தயார் செய்யவுள்ளது.